டி.கல்லுப்பட்டி அருகே சிறுவன் கொலை - தாயிடம் தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே 5 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்தான். அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள வி.சத்திரப்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட குச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது30), கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி ஆனந்த ஜோதி (24). இவர்களுக்கு 5 வயதில் ஜீவா என்ற மகனும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தஜோதி விருதுநகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மகன் ஜீவா குச்சம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தான்.

நேற்று ஆனந்தஜோதி வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் மதியம் அங்கன்வாடியில் இருந்து ஜீவா வீட்டுக்கு நடந்து வந்தபோது காலில் முள் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு நொண்டிக்கொண்டே வந்த ஜீவா பின்னர் தூங்கியதாக தெரிகிறது.

மாலையில் நீண்ட நேரமாகியும் ஜீவா எழுந்திருக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஜீவாவை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வி.சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து ஜீவாவின் உடலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜீவாவின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டிருப்பதற்கான அடையாளம் இருந்தது. இதனால் சிறுவன் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நேற்று வீட்டுக்கு சிறுவன் வந்தபின் சிறுவனுடன் அவரது தாயார் ஆனந்த ஜோதி மட்டுமே இருந்துள்ளார். இதன் காரணமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

ஆனந்தஜோதி பெற்ற மகனையே கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com