

வேலூர்:
வேலூர் அப்துல்லாபுரம் அடுத்த மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (33) முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது24). இருவரும் புதிய பஸ் நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.
இருவரும் போதையில் இருக்கும் போது அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகே மதனுக்கும் கோபிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
நேற்று ஆயுதப்பூஜை என்பதால் புதிய பஸ் நிலையம் முத்து மண்டபம் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் ஒன்றாக சேர்ந்து பூஜை போட்டனர்.
அப்போது குடிபோதையில் வந்த கோபி, அங்கிருந்த மதனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மதன் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து வடக்கு இன்ஸ் பெக்டர் அறிவழகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இறந்த மதனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ஆட்டோ டிரைவர் கோபியை கைது செய்தனர்.