அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அவரும் குழந்தையும் முதல் உதவி சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமலா - குழந்தை
விமலா - குழந்தை
Published on

காஞ்சிபுரம்:

நெமிலியை அடுத்த பானவரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி விமலா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விமலா அத்திவரதரை வழிபட விரும்பினார். இதையடுத்து அவரை கணவர் மற்றும் குடும்பத்தினர் அத்திவரதர் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் அழைத்து வந்தனர்.

பொது தரிசன பாதையில் நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டனர். பின்னர் அவர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்தபோது திடீரென விமலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 16 கால் மண்டபத்தில் உள்ள மருத்துவ முகாமுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ குழுவினர் விரைந்து வந்து விமலாவை மீட்டு தங்களது முகாமுக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் விமலாவுக்கு அழகான ஆண் குந்தை பிறந்தது. குழந்தை 3 கிலோ எடை இருந்தது. குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்க வந்த நேரத்தில் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக கூறி விமலாவின் கணவரும் குடும்பத்தினரும் கூறி மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது விமலாவும் குழந்தையும் முதல் உதவி சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தால் காஞ்சிபுரம் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com