நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஹோலி பண்டிகையையொட்டி விஷ சாராயம் குடித்த 17 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
விஷ சாராயம்
விஷ சாராயம்
Published on

காட்மாண்டு:

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஹோலி பண்டிகையை யொட்டி கடந்த 10-ந்தேதி வீட்டிலேயே மது தயாரித்து குடித்தனர்.

அவர்களில் 28 பேருக்கு மது குடித்த சில மணி நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 17 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 11 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com