ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Published on

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் அதிகளவு ஓடைமணல் கடத்தல் நடந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் பொதுமக்களும் குடிநீருக்காக அலைந்து திரிந்த வண்ணம் உள்ளனர்.

கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சுமணி தலைமையிலான போலீசார் தங்கம்மாள்புரம்- கோவில்பாறை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிராக்டரில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் தப்பிஓடிய நபர்கள் அதேபகுதியை தங்கமலை, சுப்பிரமணி என தெரியவந்தது.

அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com