அம்மாபேட்டையில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்

அம்மாபேட்டையில் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
புகையிலைப் பொருட்கள்
புகையிலைப் பொருட்கள்
Published on

அம்மாபேட்டை:

தஞ்சை மாவட்டம் மெலட்டூர், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ஏ.அஜந்தன் அறிவுறுத்தலின் படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சி.மோகன் தலைமையில் பல்நோக்கு சுகாதார மேற்பார்வையளர்கள் அருள் பிரகாசம், பாண்டியன், பெரியண்ணன், சுகாதாரஆய்வாளர் குணசீலன் உள்ளிட்ட குழுவினர் அம்மாபேட்டை பேரூராட்சிக் குட்பட்ட கடைகள் வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.3100 அபராதம் வசூலித்தனர். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருள்கள் விற்பனை இல்லை எனவும், பொது இடங்களில் பீடி, சிகரெட் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என விளம்பர பலகைகள் வைக்க கடை உரிமையாளர் களிடம் அறிவுறுத்தினர்.

இதில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணி, வாகன ஓட்டுனர் மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com