

திருப்பூர்:
கொரோனா பரவல் காரணமாக ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையொட்டி 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 06029), அதுபோல் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (எண் 06030) ரெயில் இன்று (புதன்கிழமை) முதல் ரத்து செய்யப்படுகிறது.
கோவையிலிருந்து பெங்களூர் செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 06154) மற்றும் பெங்களூரில் இருந்து கோவை செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 06153) நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது.
கொச்சுவேலியில் இருந்து பனஸ்வாடிக்கு கோவை, ஈரோடு, சேலம் வழியாக செல்லும் வாராந்திர ரெயில் (எண் 06319) நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது. பனஸ்வாடியிலிருந்து கொச்சுவேலிக்கு சேலம், ஈரோடு, கோவை வழியாக செல்லும் ரெயில் (எண் 06320) 30-ந் தேதியிலிருந்து ரத்து செய்யப்படுகிறது.
எர்ணாகுளத்தில் இருந்து பனஸ்வாடிக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 06129) வருகிற 3-ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் பனஸ்வாடியில் இருந்து எர்ணாகுளத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 06130) வருகிற 4-ந் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.