மேற்கு மாம்பலம் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன்

சென்னை மேற்கு மாம்பலம் அடுக்கு மாடி குடியிருப்பில் 2-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
மேற்கு மாம்பலம் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன்
Published on

சென்னை:

மேற்கு மாம்பலம், எம்.எச்.ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் குமார். இவரது மனைவி பரிமளா. இவர்களது 1½ வயது மகன் பரத். இவர்கள் குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று மகன் பரத்துக்கு பால்கனியில் நின்றபடி தாய் பரிமளா ‘பிஸ்கட்’ கொடுத்தார். பின்னர் அறையில் இருந்த பாலை எடுப்பதற்காக பரிமளா மட்டும் வீட்டுக்குள் சென்றார்.

அப்போது பால்கனியில் நின்ற சிறுவன் பரத், தடுப்பு கம்பிகளுக்கு இடைவெளி வழியாக 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுவன் பரத்தின் நெற்றியில் மட்டும் காயம் ஏற்பட்டு இருந்தது. அதில் அவனுக்கு தையல் போடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். இதனால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com