பெண்களின் பேவரைட் 'கொலுசு' - ட்ரெண்டிங்கில் கலக்கும் லேட்டஸ்ட் டிசைன்கள்!

காலில் வெள்ளி நகைகளை அணிவது உடலில் உள்ள நேர்மறை ஆற்றலை தக்க வைத்து , ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
AnkletDesigns
Published on

வெள்ளி நகைகளில் பெண்களுக்கு எப்போதும் பிரியமாக இருப்பது காலில் அணியும் கொலுசு தான். பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் கொலுசுகள், தற்போது ஃபேஷன் உலகிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறியுள்ளன.

AnkletDesigns

ட்ரெண்டிங்கில் கலக்கும் ‘ஆன்டிக் கொலுசுகள்’..

பாரம்பரியமான மற்றும் பழங்கால தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு ஆன்டிக் கொலுசுகள் முதல் தேர்வாக உள்ளன. சற்று அடர் நிற வெள்ளி மற்றும் செதுக்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த டிசைன்கள், பட்டுப்புடவை மற்றும் பாரம்பரிய ஆடைகளுக்கு அசாத்திய அழகைத் தருகின்றன.

AnkletDesigns

காலேஜ் பெண்களின் சாய்ஸ்: ‘சிங்கிள் லேயர் & லைட்வெயிட் கொலுசுகள்’..

தற்போதைய கல்லூரி மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் சிங்கிள் லேயர் கொலுசுகள் மிகவும் பிரபலம். மெலிதான வெள்ளிச் சங்கிலியில் சிறிய முத்துக்கள், கற்கள் அல்லது இதயம், பட்டாம்பூச்சி போன்ற குட்டி டாலர்கள் போன்ற டிசைன்கள் ஜீன்ஸ், குர்தி போன்ற மாடர்ன் ஆடைகளுக்கு மிக கச்சிதமாகப் பொருந்துகின்றன. இதை பெண்கள் அதிகம் விரும்பி அணிகிறார்கள்.

AnkletDesigns

சத்தமில்லா 'மிரர் & ஸ்டோன் கொலுசுகள்'..

முன்பெல்லாம் கொலுசு என்றாலே சத்தம் வர வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், தற்போது சத்தமில்லாத, அதே சமயம் பளபளக்கும் மல்டி-கலர் கற்கள் மற்றும் சிறிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட கொலுசுகளைப் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். இவை அனைத்து வகையான நிற ஆடைகளுக்கும் மேட்ச் செய்யும் வகையில் கிடைக்கின்றன.

AnkletDesigns

குழந்தைகளுக்கான 'முத்து மற்றும் மணி' கொலுசுகள்..

குழந்தைகளின் மென்மையான சருமத்திற்குப் பாதிப்பில்லாத மெல்லிய டிசைன்கள். நடக்கும் போது இனிமையான சத்தம் எழுப்பும் குட்டி மணிகளும், வண்ண வண்ண முத்துக்களும் பதிக்கப்பட்ட கொலுசுகள் குழந்தைகளுக்குத் தனி அழகு சேர்க்கின்றன.

AnkletDesigns

மணப்பெண்களுக்கான ஸ்பெஷல் 'பாயல்' டிசைன்கள்..

திருமண நாளில் மணப்பெண்ணின் கால்களைப் பேரழகாக்க கனமான மற்றும் முகலாய பாணி ஜவஹர் கொலுசுகள் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை கால்களை முழுமையாக மூடும் அளவுக்கு அகலமான வேலைப்பாடுகளுடன் அரச தோற்றத்தைத் தருகின்றன.

AnkletDesigns

ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கொலுசு அணிவது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, அதன் பின் அறிவியல் பூர்வமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. காலில் வெள்ளி நகைகளை அணிவது உடலில் உள்ள நேர்மறை ஆற்றலை தக்க வைக்க உதவுகிறது என்றும், ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

நீங்களும் உங்களுக்கு ஏற்றவாறு உங்கள் கால்களை அழகுபடுத்த விரும்பினால், இந்த லேட்டஸ்ட் கலெக்ஷன்களை ட்ரை செய்து பார்க்கலாம்!

X

Maalai Malar
www.maalaimalar.com