முகப் பொலிவைக் கூட்டும் ‘Blush’.. சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி?

'ப்ளஷை' முக அமைப்பிற்கு ஏற்ப சரியாக பயன்படுத்துவது எப்படி?
BlushMakeup
Published on

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் தங்களின் தினசரி அழகை மேம்படுத்த மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் முகத்திற்கு உடனடி புத்துணர்ச்சியையும், இயற்கையான பொலிவையும் தருவதில் 'ப்ளஷ்' முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால், அதைச் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் மேக்கப் செயற்கையாகத் தோற்றமளிக்கும் வாய்ப்பும் உள்ளது. பெண்களுக்கும் இதை அதிகமாக விரும்புகிறார்கள்.

BlushMakeup

முக அமைப்பிற்கு ஏற்ப..
வட்ட வடிவ முகம்

உங்கள் கன்ன எலும்புகளின் மேல் பகுதியில் தொடங்கி, காதுப் பகுதி நோக்கி மேல்நோக்கி ப்ளஷ் பயன்படுத்த வேண்டும். இது முகத்தை மெலிதாகக் காட்ட உதவும். சிரித்தால் செம்ம லுக்கை தரும்.

நீள வடிவ முகம்

கன்னங்களின் மையப் பகுதியில் தொடங்கி, காதுகளை நோக்கி நேர்க்கோட்டில் ப்ளஷ் பயன்படுத்த வேண்டும். இது முகத்தின் நீளத்தைக் குறைத்துக் காட்டும். தனி அழகை கூட்டும்.

சதுர வடிவ முகம்

கன்னங்களின் மையப் பகுதியில் வட்ட வடிவில்பயன்படுத்த வேண்டும். இது முகத்தின் கூர்மையான தாடை அமைப்பை மென்மையாக்க உதவும். பார்ப்பதற்கே அழகாக தெரியும்.

BlushMakeup

ஸ்கின் டோன் மற்றும் ப்ளஷ் நிறங்கள்..
மாநிறம்

ரோஸ், பீச் அல்லது கோரல் போன்ற நிறங்கள் இவர்களுக்கு மிக அழகாகப் பொருந்தும்.

கருமை நிறம்

பெர்ரி, செம்பழுப்பு அல்லது அடர் செந்நிற ப்ளஷ் நிறங்கள் முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும்.

வெளிர் நிறம்

லேசான இளஞ்சிவப்பு அல்லது சாஃப்ட் பீச் நிறங்கள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

BlushMakeup

அப்ளை செய்யும் போது கவனிக்க வேண்டியவை..

சிரித்துக் கொண்டே தொடங்குங்கள்..

கண்ணாடியைப் பார்த்து லேசாகச் சிரிக்கும் போது உப்பலாகத் தெரியும் கன்னப் பகுதியில் இருந்து ப்ளஷ் செய்யத் தொடங்க வேண்டும்.

நன்கு பிளெண்ட் செய்யவும்..

ப்ளஷ் பயன்படுத்திய பிறகு, அது திட்டுத்திட்டாகத் தெரியாமல் இருக்க மேக்கப் பிரஷ் கொண்டு நன்றாக முகத்தோடு கலக்குமாறு ப்ளேன்ட் செய்ய வேண்டும்.

அளவோடு பயன்படுத்துங்கள்..

எப்போதும் பிரஷில் குறைந்த அளவு ப்ளஷ் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

BlushMakeup

சீக்ரெட் டிப்ஸ்..

‘க்ளாஸ் ப்ளஷ்’ ஜெல் வடிவில் இருக்கும் இந்த மேஜிக் ப்ளஷ்,முகத்தில் வைத்த உடனே சருமத்தோடு கச்சிதமாக ப்ளேன்ட் ஆகி கன்னங்களுக்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தையும், கண்ணாடியைப் போன்ற க்ளாஸி ஷைனிங் தோற்றத்தையும் தரும். மேக்கப் போட்டதே தெரியாமல், சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்கள் போல உங்கள் முகத்தை நாள் முழுவதும் ஜொலிஜொலிக்க வைக்க இதைப் பயன்படுத்துங்கள்!

முறையான மற்றும் அளவான ப்ளஷ் பயன்படுத்தினால் உங்கள் முகத்தை நாள் முழுவதும் இயற்கையான அழகுடன் வைத்திருக்க உதவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com