முதுமைக்கு காரணமாகும் மூளை

40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறையத் தொடங்குகிறது.பொதுவாகவே முதுமைக்கு காரணமாக இருப்பது மூளைதான்.
முதுமைக்கு காரணமாகும் மூளை
Published on

இந்தியாவுக்கு இளமையான நாடு என்றொரு பெயர் இருக்கிறது. உலகிலேயே இளைஞர்களை அதிகமாக கொண்டு இருப்பது நம் நாடுதான். ஆனால் இந்த பெருமை எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இருக்கும்போல. அதற்கு காரணம் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான்.

இப்போது போகும் வேகத்தில் போனால் 2060-ல் இந்திய மக்களில் 34 கோடி பேர் முதியவர்களாக இருப்பார்கள். அப்போதைய மக்கள்தொகையில் இது 26 சதவீதமாக இருக்கும். அப்போது இந்தியா இளமையான நாடு என்ற பெயரை இழக்கும் என்கிறார்கள்.

பொதுவாகவே முதுமைக்கு காரணமாக இருப்பது மூளைதான். மனிதனுக்கு 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறையத் தொடங்குகிறது, என்கிறது மருத்துவ உலகம்.

சராசரியாக 1 கிலோ 394 கிராம் எடை கொண்ட மூளை, முதுமை வயதை அடையும்போது 1 கிலோ 161 கிராமாக குறைந்துவிடுகிறது.

அதோடு மூளைக்குப் போகும் ரத்தமும் குறைந்து விடுகிறது. மூளையில் ஏற்படும் இந்த மாற்றம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.

நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண், காது, சுவை உணர்வு, வாசனை உணர்வு, தசைகளின் இயக்கம், உணர்திறன் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் குறைகிறது.

மேலும் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் மற்றும் சிங்குலேட் மேடு என்ற பகுதிதான் மனதை கட்டுப்படுத்துகிறது. முதுமை வந்தபின் இவை சக்தியை இழந்து விடுகின்றன. இதனால் முதுகெலும்பும் பாதிக்கப்படுகிறது. உணர்வு முடிச்சுகள், உள் மூளை நரம்பு அணுக்கள், சிறு மூளை அணுக்கள் ஆகியவை சுமார் 25 சதவீதம் வரை குறைந்து விடுகிறது.

ஒரு மனிதனுக்கு வயதான பின்புதான் அல்ஜீமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன இதன் தாக்கம் உள்ளவர்கள் நெருப்பு, மின்சாரம், கத்தி போன்றவற்றின் ஆபத்தை உணராமல் கூட செயல்படுவார்கள், என டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com