சென்னையில் வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம் 'தரமணி': இயக்குநர் ராம்

பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படமாக 'தரமணி' படம் உருவாகியிருப்பதாக இயக்குநர் ராம் கூறியிருக்கிறார்.
சென்னையில் வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம் 'தரமணி': இயக்குநர் ராம்
Published on

அந்த வகையில், ஜே.எஸ்.கே. பிலிம் கார்பொரேஷன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் 'தரமணி' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.  இது போன்ற தற்கால ஆண், பெண் உறவு முறை காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும்.

இதுகுறித்து இயக்குனர் ராம் பேசுகையில், ''அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் 'தரமணி'. 

உலக மயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி 'தரமணி' படத்தில் பேசியுள்ளேன்.

இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையை பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. 'தரமணி' பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக 'தரமணி' இருக்கும்''

X

Maalai Malar
www.maalaimalar.com