யஷ் - கியாரா அத்வானி.. 'கெமிஸ்ட்ரியே இல்லை' என ரசிகர்கள் விமர்சனம்!

இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்துப் பாடியுள்ளார்.
ToxicMovie
Published on

கேப்ரியல் கிரியேஷன்ஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ராக்கி ஸ்டார் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் நிலவி வருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான 'தபாஹி' என்ற ரொமாண்டிக் பாடல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

யஷ் மற்றும் கியாரா அத்வானி முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த ஜோடியின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த வேளையில், இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தை உலுக்கும் கலவையான விமர்சனங்கள்..

பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே, எக்ஸ் தளத்தில் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். பலரும் யஷ் மற்றும் கியாராவுக்கு இடையே 'ஜீரோ கெமிஸ்ட்ரி' இருப்பதாகவே வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.

"பாடலின் வரிகள் மிகவும் பலவீனமாக உள்ளன. வீடியோவில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை. இதை ஓகே செய்தவர்களுக்கு தரமான ரசனை தேவை" என்றும் "இருவருக்குள்ளும் துளியும் கெமிஸ்ட்ரி இல்லை.

யஷ் தனது கம்பீரமான தோற்றத்தை காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். கியாரா எல்லை மீறாமல் நடிக்க நினைக்கிறார். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா போன்றவர்கள் இதை இயக்கியிருந்தால் எப்படி ரொமான்ஸ் காட்சிகளை எடுக்க வேண்டும் என்று காட்டியிருப்பார்கள்" என்று விமர்சனங்களை கூறிவருகின்றனர்.

"இருவரும் ஜோடியாகப் பார்க்கும்போது மிகவும் தயக்கத்துடனும், அசௌகரியத்துடனும் காட்சியளிக்கிறார்கள்". "யஷ் தனது நடிப்பு மூலம் இம்ரான் ஹாஷ்மி போல மாற முயற்சி செய்துள்ளார்.

இயக்குநர் 'ஹால்-இ-தில்' பாடல் போன்ற ஒரு வைபைக் கொண்டு வர முயன்று தோற்றுள்ளார்" என ஒவ்வொரு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.

ரசிகர்கள் பலர், படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வீடியோவை விட, ரசிகர்கள் செய்யும் 'ஃபேன் மேட் எடிட்ஸ்' மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாடலின் பின்னணி விபரங்கள்..

இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்துப் பாடியுள்ளார்.

பாடலுக்கான வரிகளை கன்னடத்தில் யோகராஜ் பட், தெலுங்கில் ராமஜோகய்யா சாஸ்திரி, மலையாளத்தில் ரஃபீக் அகமது மற்றும் தமிழில் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளனர்.

படத்தின் ரிலீஸ் தேதி..

'டாக்ஸிக்' திரைப்படம் ஆகஸ்ட் 26 அன்று கன்னடம், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com