விம்பிள்டன் 2026: அனன்யா பாண்டே, ஸ்ரீலீலா மற்றும் இந்திய நட்சத்திரங்களின் அசத்தல் ஃபேஷன் லுக்ஸ்!

விளையாட்டு உலகைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் தங்களது ஃபேஷன் ஸ்டைலால் அசத்தினர்.
Wimbledon 2026-Fashion Looks of  Indian Stars
Published on

விம்பிள்டன் 2026 டென்னிஸ் போட்டித் தொடர், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக்கு மட்டுமல்லாமல், உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் களமாகவும் மாறியுள்ளது. இம்முறை மைதானத்தில் டென்னிஸ் பந்துகள் பறந்ததை விட, இந்திய நட்சத்திரங்கள் தங்களது அசத்தலான ஆடைகளில் வலம் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தான் சமூக ஊடகங்களில் ஹாட் டாப்பிக்.

பாலிவுட் அழகிகளின் ஃபேஷன் ஆதிக்கம்:

அனன்யா பாண்டே:

விம்பிள்டன் அரங்கில் தனது முதல் அறிமுகத்தை பிரம்மாண்டமாக பதிவு செய்தார் அனன்யா. அவர் அணிந்திருந்த அடர் சிவப்பு நிற உடை அனைவரின் கண்களையும் கவர்ந்தது.

பிரியங்கா சோப்ரா மற்றும் லாரா தத்தா:

விம்பிள்டன் போட்டிகளுக்கு வழக்கமாக செல்லும் பிரியங்கா சோப்ரா, இந்த முறை இரண்டு விதமான லுக்ஸில் அசத்தினார். முதல் தோற்றத்தில் ஆஃப்-வைட் நிற உடையில் தலையில் ஸ்டைலான 'பண்டானா' அணிந்து மாடர்னாக காட்சியளித்தார்.

இரண்டாவது தோற்றத்தில், நேர்த்தியான வெள்ளை நிற ஹால்டர்-ஸ்டைல் ஆடையில் வந்து ரசிகர்களைக் கவர்ந்தார். அவருடன் முன்னாள் பிரபஞ்ச அழகி லாரா தத்தா நீல நிற சம்மர் டிரஸ்ஸில் இணைந்து போஸ் கொடுத்தார். நடிகை ஆயிஷா கானும் விம்பிள்டன் 2026-ல் சிவப்பு நிற ஆடையில் வந்து மைதானத்தில் தனித்துத் தெரிந்தார்.

தென்னிந்திய நட்சத்திரங்களின் விம்பிள்டன் அறிமுகம்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இளம் நடிகைகள் இருவர் இந்த ஆண்டு விம்பிள்டனில் தடம் பதித்துள்ளனர்.

ஸ்ரீலீலா:

தனது விம்பிள்டன் அறிமுகத்தில் மிகவும் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான ஸ்ட்ரைப்ஸ்ட் பேண்சூட் அணிந்து செம்ம 'அல்ட்ரா-சிக்' தோற்றத்தில் காட்சியளித்தார்.

கல்யாணி பிரியதர்ஷன்:

நீலம் மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட அசிமெட்ரிகல் ஆடையில் மிகவும் அழகாக காட்சியளித்தார் கல்யாணி.

கிரிக்கெட் உலகின் மாஸான என்ட்ரி:

விளையாட்டு உலகைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் தங்களது ஃபேஷன் ஸ்டைலால் அசத்தினர்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஞ்சலி :

விம்பிள்டனின் வழக்கமான பார்வையாளரான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், கோடுகள் போட்ட சூட்டில் கம்பீரமாக காட்சியளித்தார். அவருடன் வந்த அவரது மனைவி அஞ்சலி, நேர்த்தியான பச்சை நிற ஷர்ட்-டிரெஸ் அணிந்து எளிமையாகவும் அழகாகவும் காணப்பட்டார்.

சுப்மன் கில்:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் செக் பிளேஸர், ஐவரி பேண்ட் மற்றும் நீல நிற சட்டை அணிந்து செம ஹேண்ட்சமாக காட்சியளித்தார்.

மற்ற கிரிக்கெட் பிரபலங்கள்:

யுவராஜ் சிங், அபிஷேக் சர்மா மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரும் தங்களது முறையான ஃபார்மல் உடைகளில் கம்பீரமாகப் பங்கேற்றனர். மேலும், ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி சோஃபி ஷைன் ஜோடியாக ஒரே மாதிரியான ஆடைகளில் வந்து அசத்தினர்.

மற்ற பிரபலங்கள்:

அர்ச்சனா பூரன் சிங்-பர்மீத் சேத்தி இந்த நட்சத்திர தம்பதிகள் ஆஃப்-வைட் மற்றும் சாம்பல் நிற பேண்சூட்களில் கச்சிதமான தோற்றத்தில் காட்சியளித்தனர்.

பிரபல கன்டென்ட் கிரியேட்டரான தர்ணா துர்கா, விம்பிள்டன் அரங்கில் தனது அறிமுகத்திற்காக ஒரு நேர்த்தியான பீஜ் நிற ஆடையைத் தேர்ந்தெடுத்து அசத்தினார்.

விம்பிள்டன் 2026 விளையாட்டுப் போட்டியாக மட்டுமில்லாமல், இந்தியத் திரையுலகம் மற்றும் விளையாட்டு உலகத்தைச் சேர்ந்த பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் திருவிழாவாகவும் மாறி, ரசிகர்களுக்குப் பெரும் விருந்தளித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com