சினிமா பாடகியான வில்லுபாட்டு மாதவி

வீரமும், தெய்வ நம்பிக்கையும் மண்ணின் அடையாளம் என்ற கதை கருவுடன் உருவாகி உள்ள இந்த படத்தை எம்.செல்வகுமார் இயக்கி இருக்கிறார்.
வில்லுபாட்டு மாதவி
Published on

வில்லு பாட்டு கலை மூலம் மக்களிடையே பிரபலமானவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாதவி. சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுக்கு கால்சீட்டுக்கு காத்து கிடப்பது போல் கோவில் திருவிழாக்களில் வில்லிசைக்கு மாதவியின் கால்சீட்டு கேட்டு காத்திருப்போர் ஏராளம்.

மாதவி வில்லிசை நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். பாரம்பரிய வில்லிசை கலையை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமை மாதவிக்கு உண்டு.

பாடகியாக அறிமுகம்

இந்நிலையில், வில்லிசை பாடகி மாதவி முதல்முறையாக பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிறார். சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள வேட்டசாமி படத்தில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார் மாதவி.

படத்தில் ஜிப்ரான் இசையில் சுடலைமாடன் வேட்டை பாடலை அவர் பாடியுள்ளார். மாதவி பாடியுள்ள தகவலை இசை அமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்துள்ளார். படத்தில் அருள்நிதி, அமீர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், அர்ஜெய், ஓ.ஏ.கே.சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ளனர். வீரமும், தெய்வ நம்பிக்கையும் மண்ணின் அடையாளம் என்ற கதை கருவுடன் உருவாகி உள்ள இந்த படத்தை எம்.செல்வகுமார் இயக்கி இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com