விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கினின் மிரட்டலான 'ட்ரெயின்' பட டீசர் வெளியீடு

இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார்.
train
train
Published on

பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெயின்’.

ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

ஒரே இரவில்

மிஷ்கினின் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு டார்க் திரில்லராக ட்ரெயின் உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார். மேலும் நடிகை ஸ்ருதி ஹாசன் குரலில் 'கன்னகுழிக்காரா' என்ற பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

டீசர்

படத்தின் படபிடிப்பு நிறைவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அஞ்சாதே, யுத்தம் செய் உள்ளிட்ட வழக்கமான சிக்னேச்சர் ஸ்டைலில் மிரட்டும் த்ரில்லராக ட்ரெயின் இருக்கும் என்பது தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலம் புலனாகிறது.

ஹாலிவுட் தரத்திலான ஆக்ஷன் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.

போலீஸ் அதிகாரியாக நரேன் நடித்துள்ள நிலையில் மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்திற்கும் இதற்கும் கதைதொடர்பு இருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளது.

இதனால் மிஸ்கின் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

படத்தின் மற்ற பாடல்களும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com