

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கே வெளிவர வேண்டியது.
ஆனால் தணிக்கை சிக்கலால் வெளிவரமால் போனது. இந்நிலையில் கடந்தவாரம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் படம் ஜூலை.23ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் அடியே என் பூந்தேனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், பாடலையும் அவரே பாடியுள்ளார்.