சூர்யா 44 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சூர்யா 44 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
Published on

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.

சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் வீடியோவில் ரத்தத்துடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் துப்பாக்கியேந்தி மாஸ் காட்டும் லுக்கில் சூர்யா நடந்துவருவது விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தந்த வைபை மீண்டும் தருவதாக உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஊட்டியில் தொடங்கியுள்ளது. அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com