'தி புரூப்' : ஆக்ஷன் வேடத்தில் தன்ஷிகா

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது
'தி புரூப்' : ஆக்ஷன் வேடத்தில் தன்ஷிகா
Published on

பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.

இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி உள்ளது. அதில் பிரமாண்ட சண்டைக் காட்சியில் எதிரியின் நெஞ்சில் ஏறி தன்ஷிகா ஆவேசமாக கால் வைத்து நிற்பது போன்று அந்த போஸ்டர் காட்சி இடம் பெற்று உள்ளது.

இந்த படப்பிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த படம் விரைவில் தன்ஷிகாவுக்கு 'ஆக்ஷன்' நாயகி என்ற பட்டத்தை பெற்று தரும் ரசிகர்கள் இணைய தளத்தில் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர் 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com