விமலின் 34- வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த மாதம் சார் திரைப்படம் வெளியானது. விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில் நடித்துள்ளார்.
விமலின் 34- வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த மாதம் சார் திரைப்படம் வெளியானது.இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் விமல் அடுத்ததாக தனது 35 வது திரைப்படமாக பெல்லாடோனா என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில்  நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று விஜய் சேதுபதி அவரது எக்ஸ் பக்கதில் வெளியிட்டார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இரு மதத்தினருக்கும் உள்ள வேறுபாடை சுட்டிக்காட்டுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com