

இந்த படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அதிலும் ஒரு காட்சியில் வடிவேலு, 'சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்' என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு 'சிங் இன் த ரெயின்' பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார். 'நட்பு' என ஒரே ஒரு வார்த்தையில் அந்த சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார் பிரபுதேவா.