சிம்புவின் 50வது படத்தை இயக்கும் மணிரத்னம்?

நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.இப்படத்திற்கு பிறகு சிம்பு படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிம்புவின் 50வது படத்தை இயக்கும் மணிரத்னம்?
Published on

பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு சிம்பு, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு பிறகு சிம்புவின் 50வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com