கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்த 'ஆர்.சி.15' படக்குழு

கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்த 'ஆர்.சி.15' படக்குழு
Published on

கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டினார். இதையடுத்து, காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

கியாரா அத்வானி  -சித்தார்த் மல்ஹோத்ரா

ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில், கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு ஆர்.சி.15 படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

கியாரா அத்வானி, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்.சி.15' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com