புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி செலுத்திய 'கே.ஜி.எப்-2' படக்குழு

'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்
Published on

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

புனித் ராஜ்குமார்

பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. டிரைலர் வெளியீட்டிற்காக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடித்தி டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி செலுத்தி பின்னர் கே.ஜி.எப்-2 படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com