'பாஸ் பார்ட்டி'.. குத்தாட்டம் போட வைக்கும் சிரஞ்சீவி படத்தின் முதல் பாடல்..

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'.இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் கதாநாயகியாக நடிக்கிறார்.
வால்டேர் வீரய்யா
வால்டேர் வீரய்யா
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வால்டேர் வீரய்யா

குத்துபாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை நகாஷ் அஜீஸ், தேவி ஸ்ரீ பிரசாத், ஹரி பிரியா மூவரும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com