

மலையாளத்தில் ஆவேஷம் படத்தை இயக்கிய ஜித்து மாதவனுடன் நடிகர் சூர்யா இணைந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 47 எனப் பெயிரிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான கருப்பு திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் சூர்யா நடித்துள்ள படப்பிடிப்பின் சில காட்சியை படக்குழுவினர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ழகரம் தயாரிப்பு நிறுவம், தனது இன்ஸ்டா பக்கத்தில், #சூர்யா47 படப்பிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு, ‘தி ஒன்’ சூர்யாவுடன் திரையரங்குகளில் சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவுடன் மலையாளத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த ‘ரோமன்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய, இயக்குநர் ஜித்து மாதவன் முதல்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.
இயக்குநர் ஜித்துவின் தனித்துவமான நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் கச்சிதமான பொழுதுபோக்கு மசாலா கலந்த, ஒரு மாஸ் என்டர்டெய்னர் படமாக இப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான ஒரு காவல்துறை அதிகாரியாக ஒரு குழுவை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிகிறது.
‘சூர்யா 47' படத்தில், முன்னணி கதாநாயகியான நஸ்ரியா நசிம் மற்றும் அஸ்லென் கே. கஃபூர் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஜான் விஜய் மற்றும் ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.