சூர்யா 44 படத்தின் புதிய அப்டேட்

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது.சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
சூர்யா 44 படத்தின் புதிய அப்டேட்
Published on

பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக்களத்தில் படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்.

இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம். இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க்வுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com