Selvaraghavan | மனிதன் தெய்வமாகலாம் படக்குழுவை பார்த்து இப்படியும் படம் எடுக்கலாம் என்று கற்றுக் கொண்டேன் - செல்வராகவன்

இந்தப் படத்திற்கு ஏ.கே. ப்ரியன் இசையமைத்துள்ளார்.
Selvaraghavan | மனிதன் தெய்வமாகலாம் படக்குழுவை பார்த்து இப்படியும் படம் எடுக்கலாம் என்று கற்றுக் கொண்டேன் - செல்வராகவன்
Published on

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் `மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். விஜயா சதீஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. `மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் `தங்க ரத்தினமே,' `கலங்காதே ராசாவே', பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஏ.கே. ப்ரியன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மனிதன் தெய்வமாகலாம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த வகையில், செல்வராகவன் இந்த நிகழ்ச்சியில் பேசும் போது, "இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அசுரத்தனமாக உழைத்தனர்.

அவர்கள் எப்போது தூங்குவார்கள், சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு கடும் உழைப்பாளிகள். இவர்களைப் பார்த்து நான் இப்படியும் படம் எடுக்கலாம் என்று கற்றுக் கொண்டேன். படத்தில் நடித்துள்ள நடிகை கௌசல்யாவை பார்த்து ஒரு காலத்தில் நானே ரசித்து "ஜொள்ளு" ஊத்தி இருக்கிறேன். இப்பொழுது அருகிலேயே இந்த நிகழ்ச்சியில் அமர்வது கூட சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார்.

மனிதன் தெய்வமாகலாம் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ரவி வர்மா மேற்கொள்ள, தீபக் எஸ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்திற்கு பாக்கியராஜ் வெள்ளையன் கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com