30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.ஜானகியின் உடல் தகனம்

பாடகி ஜானகி உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
S.Janaki body cremated
Published on

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பாடகி எஸ்.ஜானகி அம்மாள் தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடியுள்ளார்.

பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்ட பாடகி ஜானகி உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஜானகியின் உடல் மைசூருவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, மறைந்த ஜானகியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மறைந்த பாடகி.எஸ் ஜானகியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவரது உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.

பின்னர், மைசூரில் உள்ள பண்ணை தோட்டத்தில் பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com