ராவ் பகதூர்

ராவ் பகதூர் - திரை விமர்சனம்

மெதுவாக தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் இறுதியில் மிரட்டும் சைக்கலாஜிக்கல் திரில்லராக 'ராவ் பகதூர்' ரசிக்க வைக்கிறது.
Published on
ராவ் பகதூர் - திரை விமர்சனம்(3 / 5)

கதை

1991-ம் ஆண்டு, அரச குடும்ப வாரிசான ராமப்பா ராவ் பகதூர் (சத்யதேவ்) தனது அரண்மனையில் நோயுடன் வாழ்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக மனைவி அவரிடம் பேசாமல் இருப்பதற்கான காரணமும், அவரை வாட்டும் ஒரு சந்தேகத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையும் என்ன என்பதே படத்தின் கதை.

இயக்குநர்

இயக்குநர் வெங்கடேஷ் மஹா சைக்கலாஜிக்கல் டிராமாவை மெதுவாக நகர்த்தியுள்ளார். முதல் பாதி சற்று நீளமாகத் தோன்றினாலும், 1968-ம் ஆண்டு பிளாஷ்பேக் மற்றும் 2-ம் பாதியில் வரும் திருப்பங்கள் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. குறிப்பாக கிளைமாக்சுக்கு முந்தைய அரைமணிநேரம் படத்தின் மிகப்பெரிய பலம்.

நடிகர்கள்

ராமப்பா ராவ் பகதூராக சத்யதேவ் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். வயதான தோற்றத்திலும், பிளாஷ்பேக் காட்சிகளிலும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தீபா, விகாஸ் முப்பாலா, பாலா பரசர் உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு- இசை

கார்த்திக் பர்மரின் ஒளிப்பதிவு, சமரன் சாயின் பின்னணி இசை ஆகியவை படத்தின் மர்ம உணர்வை மேலும் உயர்த்துகின்றன.

மொத்தத்தில், மெதுவாக தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் இறுதியில் மிரட்டும் சைக்கலாஜிக்கல் திரில்லராக 'ராவ் பகதூர்' ரசிக்க வைக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com