

பாலிவுட்டில் வெளியாகி வெற்றியடைந்த ராகினி எம்எம்எஸ் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை தமன்னா எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
2011 அன்று வெளியான ராகினி எம்எம்எஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளியான ராகினி எம்எம்எஸ் 2-ம் பாகத்தில் நடிகை சன்னி லியோன் நடித்தார்.
இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சஷாங்கா கோஷ் இயக்கத்தில் அமானுஷ்ய திரில்லராக உருவாகும் ‘ராகினி 3’ படத்தை, பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
ஷோபா கபூர், ஏக்தா ஆர் கபூர் மற்றும் அமர் புடாலா ஆகியோருடன் இணைந்து குமார் தெளரானி மற்றும் கிரிஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.
இந்த படத்தில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடர் இரவு நேரத்தில் நிகழும் திகில் திரைப்படமாக, காதலர்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை தமன்னா எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.