2 தேசிய விருதுகளைத் தன்வசமாக்கிய 'புஷ்பா 2' திரைப்படம்!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் 'புஷ்பா 2.
Pushpa-2
Published on

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புதுடெல்லியில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'புஷ்பா 2: தி ரூல்'திரைப்படம் இரண்டு முக்கிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்பு:

படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் தோற்றங்களையும், ஆடை வடிவமைப்புகளையும் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாக்கியதற்காக ஆடை வடிவமைப்பாளர்கள் 'ஷீத்தல் சர்மா' மற்றும் 'தீபாலி நூர்' ஆகியோருக்கு 'சிறந்த ஆடைவடிவமைப்பாளர்'க்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த அசல் திரைக்கதை:

ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி, இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாருக்கு, 'புஷ்பா 2' படத்தின் சிறந்த திரைக்கதைக்காக 'சிறந்த அசல் திரைக்கதை' (Best Original Screenplay) விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாக்களுக்கு இந்த 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com