நீளிரா- திரைவிமர்சனம்

நீளிரா- திரைவிமர்சனம்

போரின் நடுவில் சிக்கிக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் பதற்றமான இரவை மையமாக கொண்டு உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சோமீதரன்.
Published on
நீளிரா- திரைவிமர்சனம்(2.5 / 5)

இலங்கையில் இந்திய அமைதிப்படை மற்றும் போராளிகள் மோதல் தீவிரமாக இருக்கும் காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் எளிமையாக நடத்த திட்டமிடப்பட்ட திருமணம் எதிர்பாராத சூழ்நிலையில் பெரும் நெருக்கடியாக மாறுகிறது.

அனுமதி பெற்று நடத்தப்படும் அந்த திருமணம் நடைபெறும் வீட்டை இந்திய ராணுவம் சுற்றிவளைக்க, அதே நேரத்தில் போராளிகளும் அந்த இடத்தை குறிவைப்பதால், அந்த வீட்டில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.

இறுதியில், அந்த வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றதா? ராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

நவீன் சந்திரா நேர்மையான ராணுவ வீரராக, கடமை மற்றும் மனிதநேயத்தின் இடையே சிக்கிக் கொண்டுள்ள மனநிலையை அழகாக வெளிப்படுத்துகிறார். ரூபா கொடுவாயூர் பாதிக்கப்பட்ட பெண்ணாக மிக இயல்பான, உணர்ச்சிகரமான நடிப்பை கொடுத்துள்ளார்.

சித்து குமரேசன், கயல் வின்சென்ட், சுவாதி கிருஷ்ணா, நவயுகா நமச்சிவாயம், தம்பி பிள்ளை, ரோகித் கராத்தே அனைவரும் போரின் பயத்தையும் பதட்டத்தையும் கண்களில் காட்டி கதையை உயர்த்துகிறார்கள்.

இயக்கம்

போரின் நடுவில் சிக்கிக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் பதற்றமான இரவை மையமாக கொண்டு உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சோமீதரன். படத்தின் ஆரம்பம் குடும்ப உணர்வுகளோடு அமைதியாக நகர்ந்தாலும், ராணுவம் வீட்டுக்குள் நுழையும் தருணத்திலிருந்து திரைக்கதை முழுவதும் பதட்டமாக மாறுகிறது.

ஒரு இரவுக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து, போரின் மன அழுத்தத்தையும் அச்சத்தையும் மிக நெருக்கமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சோமீதரன். வசனங்கள் குறைவாக இருந்தாலும், இடையே வரும் சில வரிகள் போரின் உண்மை நிலையை நேராக தாக்கும் வகையில் இருக்கிறது. முதல் பாதி திரைக்கதை மெதுவாக செல்வது பலவினம்.

ஔிப்பதிவு

செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு போரின் பதட்டத்தையும், அந்த பகுதியின் இயல்பையும் மிக அழகாக பிடித்துள்ளது.

இசை

கே இசை காட்சிகளோடு ஒன்றிணைந்து, மனதில் ஒரு கனமான உணர்வை உருவாக்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com