பிறந்த மண்ணுக்கு என் அன்பு வணக்கம் - அல்லு அர்ஜூன் உருக்கம்

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது.புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிறந்த மண்ணுக்கு என் அன்பு வணக்கம் - அல்லு அர்ஜூன் உருக்கம்
Published on

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். படத்தின் தமிழ் ப்ரோமோஷனல் நிகழ்ச்சி இன்று சென்னையில் மாபெரும் அளவில் நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கிஸிக் பாடலை படக்குழு வெளியிட்டனர். விழாவில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நெல்சன் திலிப்குமார் மற்றும் பல திரைப்பிரபலங்கள். கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் கூறியதாவது " நான் பிறந்த இந்த மண்ணுக்கும் அன்போடு வணக்கம். என் தமிழ் மக்களே, என் சென்னை மக்களே, இந்த நாள என்னால மறக்கவே முடியாது. இந்த ஒரு நாளுக்காக எத்தனையோ வருடங்கள் காத்து கொண்டிருக்கிறேன். தேங்க் யூ, புஷ்பா திரைப்பட ப்ரோமோஷன் பணிகளுக்காக நான் பல தேசத்திற்கும், வெளிநாட்டிற்கும் சென்றேன். ஆனால் சென்னை வரும் போது அந்த உணர்வே வேறு. சென்னையில் இருந்து தான் என் தொழிலை நான் தொடங்கினேன். என் முதல் 20 வருட வாழ்க்கையை நான் சென்னையில் தான் வாழ்ந்தேன். நான் எவ்வளவு சாதித்தாலும் அதை என்னுடைய ஆணி வேரான தமிழ் மண்ணுக்குதான் சமர்பிக்கிறேன். தமிழ எதாச்சும் தப்பா பேசியிருந்தா மன்னிசுருங்க. அனைவருக்கும் நன்றி" என கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com