மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

பாடகி ஜானகியின் மறைவு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
janaki
Published on

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ். ஜானகி அம்மாள் தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடியுள்ளார்.

பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில், மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள பாடகி ஜானகி உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபின், மைசூருவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஜானகியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

மறைந்த ஜானகியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த கர்நாடக முதல் மந்திரி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com