‘மகாராஜா’ திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள்..

மகாராஜா’ திரைப்படம் தற்போது தேசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
Maharaja  Movie NationalAwards
Published on

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆண்டு வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் ₹100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த ‘மகாராஜா’ திரைப்படம், தற்போது தேசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சிறந்த குணச்சித்திரை நடிகை

சிறந்த குணச்சித்திரை நடிகைக்கான தேசிய விருது 'மகாராஜா' திரைப்படத்திற்காக 'சாச்சனா நமிதாஸுக்கு' வழங்கப்பட்டது.

சிறந்த சண்டை பயிற்சியாளர்

சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருதை 'மகாராஜா' திரைப்படத்திற்காக அனல் அரசுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com