ரூ.100 கோடி வசூலை அள்ளிய 'மா இன்டி பங்காரம்'..!

படம் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.10.70 கோடி வசூல் செய்தது.
Maa inti bangaram
Published on

நடிகை சமந்தா தயாரித்து, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் டப் செய்து 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைப்படம் கடந்த ஜூன் 19ம் தேதி வெளியான நிலையில், முதல் நாளிலேயே உலகவில் ரூ.10.70 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமந்தா ஆக்ஷன் கதைக்களத்தில் இறங்கியுள்ளதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகின.

முதல் நாள் வசூல்

'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியானது. அதன்படி, படம் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.10.70 கோடி வசூல் செய்தது.

இதில், இந்தியாவில் மட்டும் ரூ.6.20 கோடியும், வெளிநாடுகளில் ரூ.4.50 கோடியும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றது.

ரூ.100 கோடி வசூல்

‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் 22 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் விரைவில் ரூ.200 கோடி வசூலை ஈட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமா வரலாற்றில் பெண் நாயகி படங்களில் அதிகம் வசூலித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமந்தா 'பதிலடி' பதிவு

'மா இன்டி பங்காரம்' திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூல் வெற்றியை தயாரிப்பாளரான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

'மா இன்டி பங்காரம்' வெளியாவதற்கு முன்பு, என் நண்பன் ஒரு B-Centre திரையரங்கு உரிமையாளரிடம் கேட்டபோது “யார் ஒரு கதாநாயகியின் படம் பார்ப்பார்கள்? கவர்ச்சிக்குத்தான் வருவார்கள்.

அடுத்த முறை ஒரு பெண் கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படம் பற்றிக் கேட்டால், அதற்கான பதில் இப்படி இருக்காது என நம்புகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com