Love oh love movie review

லவ் ஓ லவ்- திரை விமர்சனம்

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.
Published on
லவ் ஓ லவ்- விமர்சனம்(2.5 / 5)

கதை

சம்பாதிக்கும் பணத்தை தனது அப்பாவிடம் கொடுத்து ஆச்சரியமான இளைஞனாக வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் பவிஷ். இவருக்கு நாக துர்காவுடன் காதல் மலர்கிறது. ஆடம்பரமாக இருக்கும் நாக துர்கா, அவர் தரும் செலவுகள் தாங்காமல் பவிஷ் அல்லல் பட்டுப்போகிறார். ஒரு கட்டத்தில் நாக துர்காவை பிரிய முடிவு எடுக்கிறார். ஆனால், நாக துர்கா பவிஷைதான் திருமணம் செய்துக் கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அதனால், நாக துர்காவிடம் நிபந்தனை ஒன்றை விதிக்கிறார். அதன்படி, நான்கு ஆண்டுகளாக தான் செய்த செலவுகளை தனக்கு நான்கு மாதங்களில் செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்துவிட்டால் திருமணம் செய்துக்கொள்வேன் என்றும் அப்படி செய்யாவிட்டால் பிரிவு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார்.

அவரது நிபந்தனையை ஏற்று ஆண்களின் உலகத்துக்குள் பயணப்பட முடிவு செய்யும் நாக துர்கா, நான்கு மாதங்களை வெற்றிகரமாக கடந்து பவிஷை கரம் பிடித்தாரா? முடியாமல் பிரிந்தாரா? என்பதே கலகலப்பான மீதி கதை.

நடிகர்கள்

தனுஷின் மருமகன் பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம். நடனம் மற்றும் நடிப்பில் தன்னை நிரூபித்துள்ளார்.பொறுப்பில்லாமல் இருக்கும் காதலி மீது கோபப்படும் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். பல இடங்களில் தனுஷின் சாயலை பார்க்க முடிகிறது.

புதுமுக நடிகை நாக துர்கா, பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமையாக இருக்கிறார். கதாபாத்திரத்தில் பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன், மகளிர் சங்க தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் என அனைவரும் சிறப்பான நடிப்பால் கவருகிறார்கள்.

இயக்கம்

எதார்த்தமான காதல் கதையில் கமர்ஷியல் அம்சங்கள் சேர்த்து குடும்பங்கள் ரசிக்கும்படியான காதல் படைப்பை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன்.

கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.

ஒளிப்பதிவு

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.

இசை

பாக்ஸன் இசை படத்துடன் ஒன்றிணைக்க வைக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com