பாடகி எஸ்.ஜானகி உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்: கர்நாடக அரசு

பாடகி ஜானகியின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
s.janaki
Published on

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ். ஜானகி அம்மாள் தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.

ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவர் 4 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடியுள்ளார்.

௭ஸ்.ஜானகி 2013-ம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்துவிட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.

இந்நிலையில், மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது.அதன்பின், பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

பாடகி ஜானகியின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com