24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழருக்கு ஞானபீட விருது; பிறந்தநாளன்றே பரிசைப் பெற்றார் கவிஞர் வைரமுத்து!

ஞானபீட விருதைப் பெற்ற மூன்றாவது தமிழரானார் வைரமுத்து.
24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழருக்கு ஞானபீட விருது; பிறந்தநாளன்றே பரிசைப் பெற்றார் கவிஞர் வைரமுத்து!
Published on

தமிழ் பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவுக்கு நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்கி, சிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் கரன் சிங் இவ்விருதை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

நாடு முழுவதிலும் இருந்து இந்த விருதைப் பெறும் 60-வது இலக்கியவாதி வைரமுத்து ஆவார். தனது பிறந்தநாளன்றே இந்த உயரிய தேசிய விருதை அவர் பெற்றுள்ளார்.

மேலும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் இலக்கிய ஆளுமை இவர் ஆவார். இதற்கு முன்னர் மறைந்த எழுத்தாளர்கள் அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து ஏற்கனவே 7 முறை சிறந்த திரையிசைப் பாடலாசிரியருக்கான தேசிய விருது, சாகித்திய அகாடமி விருது (கள்ளிக்காட்டு இதிகாசம்), பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1964 முதல் ஆண்டுதோறும் இந்திய மொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுடன், 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, சரஸ்வதியின் வெண்கலச் சிலை மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com