பிரபாசுக்கு திருமணமா?

பிரபாஸ் நடிப்பில் விரைவில் 'பவுசி', 'ஸ்பிரிட்', 'கல்கி-2' படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
பிரபாஸ்
Published on

‘பாகுபலி' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தவர், பிரபாஸ். தற்போது பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

விரைவில் திருமணம்

பிரபாஸ் நடிப்பில் விரைவில் 'பவுசி', 'ஸ்பிரிட்', 'கல்கி-2' படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

46 வயதாகும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். இதற்கிடையில் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரமாண்ட வீடு

பிரபல தொழில் அதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பிரபாஸ் ஐதராபாத்தில் ரூ.300 கோடி செலவில் கட்டி வரும் பிரமாண்ட வீடு, தனது வருங்கால மனைவிக்காக என்று கூறப்படுகிறது. பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்று...

X

Maalai Malar
www.maalaimalar.com