Idhayam murali poster

இதயம் முரளி- திரை விமர்சனம்

காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் OG முரளியை நினைவுப்படுத்துகிறது.
Published on
இதயம் முரளி- விமர்சனம்(3 / 5)

கதை

கதையின் நாயகன் அதர்வா திருச்சியில் படிக்கும்போது ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கிறார். டியூஷன், டென்னிஸ் கோர்ட் என ப்ரீத்தி முகுந்தனின் பின்னாடியே சுற்றுகிறார் அதர்வா. ப்ரீத்தியிடம் எப்படியாவது காதலை சொல்ல நினைத்து, சாமின் பிறந்தநாள் பார்ட்டியில் சொல்ல முயல்கிறார். அங்கு அவருக்கு எதிர்பாராத ட்விஸ்ட் காத்திருக்க காதலை சொல்லாமல் போகிறார்.

பிறகு, கல்லூரி காலத்தில் சென்னையில் கயாடு லோகரை சந்திக்கிறார். காதலிக்கிறார். கயாடுவுடன் நெருங்கி பழகும் அதர்வா, காதலை சொல்ல முயல்கிறார். ஆனால் அங்கேயும் ஒரு ட்விஸ்ட். இறுதியில் அதர்வா தனது காதலை யாரிடம் சொன்னார்? காதலை யார் ஏற்றது? அமெரிக்காவிற்கு ஏன் சென்றார்? பகத் பாசிலின் வேலை என்ன என்பது படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

அதர்வா மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பள்ளி பருவ பையன், கல்லூரி பருவ இளைஞர் என இரண்டு கெட்டப்படிலும் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் அதர்வா.

ப்ரீத்தி முகுந்தன் அழகிலும், நடிப்பு, டான்ஸிலும் ஸ்கோர் செய்துவிட்டார். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் கயாடு லோஹர் அழகாக நடத்திருக்கிறார். சின்னி ஜெயந்த், தமன் காதலியாக வரும் நிகாரிகா, டீச்சராக வரும் ஜொனிட்டா மனதில் நிற்கிறார்கள்.

தமன், பரிதாபங்கள் சுதாகர், ரக்‌ஷன், டிராவிட் வரும் காட்சிகள் கல கல. பஹத் பாசில் நடிப்பு ஏமாற்றம்.

இயக்கம்

பள்ளிப் பருவ நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம் என அனைத்தும் கலந்த யூத்புல்லான கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன். அதர்வா, அப்பா முரளி பாணியில் இரண்டு காதலையும் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் OG முரளியை நினைவுப்படுத்துகிறது.

இதயா பாடல், இடைவேளையின் போது வரும் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" பாடல் உள்ளிட்டவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.

படத்தில் தேவையில்லாமல் 2 சண்டைக் காட்சிகள் திணித்ததுபோல உள்ளது. ஆங்காங்க லாஜிக் அடி வாங்குகிறது. ஏகப்பட்ட கேள்விகள் எழுவது படத்திற்கு மைனஸ். மொத்தத்தில், ரசிக்கக்கூடிய, வண்ணமயமான, பொழுதுபோக்கான, மனதிற்கு இதமான காதல்-நகைச்சுவைத் திரைப்படம்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தை கலர்புல்லாக காட்டி இருக்கிறார்.

இசை

தமன் இசை படத்திற்கு பலம் என்றாலும் ரசிகர்களை கவரவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com