Leader | லெஜண்ட் சரவணன் சொன்னது எனக்கு பெரிய பாடமாக இருந்தது - இயக்குநர் துரை செந்தில்குமார்

லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Leader | லெஜண்ட் சரவணன் சொன்னது எனக்கு பெரிய பாடமாக இருந்தது - இயக்குநர் துரை செந்தில்குமார்
Published on

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "லீடர்" திரைப்படம் இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் துரை செந்தில் குமார் லெஜண்ட் சரவணன் குறித்து பேசினார்.

அப்போது அவர், “இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் "கருடன்" பட வாய்ப்பும் வந்தது.

நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம், என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால்- அது ஒரு துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.

நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி," என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com