2 வாரத்தில் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது Dhurandhar 2

இந்த ஆண்டு உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
2 வாரத்தில் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது Dhurandhar 2
Published on

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் படம் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியை பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்திருந்தது. இதன் 2-ம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19-ல் வெளியாகி முதல் படத்தைப் போல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், துரந்தர் 2 திரைப்படம் வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,501 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஸ்பை திரில்லர் படம் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் அதிகபட்ச வசூல், உலகளவில் மிகப்பெரிய தொடக்க வார வசூல் மற்றும் உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலை அதிவேகமாக எட்டிய திரைப்படம் உள்பட பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com