AOII | ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்கமாட்டேன்... ஆண்ட்ரியா பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
AOII | ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்கமாட்டேன்... ஆண்ட்ரியா பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
Published on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்." வெளியான சமயத்தில் இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும், காலங்கடந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பலமுறை இந்தப் படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆயிரத்தில் ஒரவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று கேள்வியும் ரசிகர்கள் நீண்ட காலமாக முன்வைக்கின்றனர். சரியான காலமும், நேரமும் அமைந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகும் என்று இயக்குநர் செல்வராகவன் பலமுறை தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் 2 வருமா? என்ற கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா சொன்ன பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, "அந்த படம் உருவானாலும் நான் அதில் நடிக்க மாட்டேன்," என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இயக்குநர் `செல்வராகவன்' உடன் பணியாற்றுவது மிகவும் கடினம், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக மட்டும் 200 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் பட்ததிற்கு பிறகு எனக்கு வந்த மற்ற படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் எனக்கு எளிமையாக இருந்தது," என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com