பாரி இளவழகனின் 'அன்பே டயானா' டிரெய்லர் வெளியீடு

'தொடுவானத்ததில்', ‘மச்சான் மாட்டிக்கிட்டான்’ பாடல்கள் வெளியாகியிருந்தன.
அன்பே டயானா
அன்பே டயானா
Published on

ஜமா புகழ் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அன்பே டயானா

பாரி இளவழகன் - ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’.

பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து ‘அன்பே டயானா’ படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

பெரம்பூரில் வசிக்கும் கதாநாயகனின் குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனுக்கு பெற்றோராக சேத்தன் மற்றும் ரோஜா நடித்துள்ளனர். மேலும், கோபி அரவிந்த், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டிரெய்லர்

ஏற்கனவே அன்பே டயானா படத்தில் இடம்பெற்றுள்ள 'தொடுவானத்ததில்', ‘மச்சான் மாட்டிக்கிட்டான்’ பாடல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

‘அன்பே டயானா’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com