தாய்மையின் மகிழ்ச்சியில் சமந்தா: நெகிழ்ச்சியான வளைகாப்பு தருணங்கள்

மிகவும் எளிமையாக நடந்த விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர். சமந்தாவின் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தாவின் வளைகாப்பு புகைப்படங்கள்
Published on

டைரக்டர் ராஜ்நிதி மோருவை 2-வது திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளார். முதல் முறையாக கர்ப்பம் அடைந்த மகிழ்ச்சியோடு அளித்த பேட்டியில்,

வளைகாப்பு விழா

நான் எப்போதுமே ஒரு தாயாக வேண்டும் என்று விரும்பி கொண்டிருந்தேன். இதற்காக கொஞ்சகாலமாகவே காத்திருந்தேன். எனக்குள் வித்தியாசமான புதிய வகையான வலிமையும் நோக்கமும் இருப்பதாக உணர்கிறேன். இந்த பயணத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என கூறினார்.

சமந்தா கர்ப்பம் அடைந்ததை இரு குடும்பமும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடந்துள்ளது. மிகவும் எளிமையாக நடந்த விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து

சமந்தாவின் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் எப்போதும் இப்படி சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com