நடிகர் சூரி நடிக்கும் புது படத்தின் அப்டேட்!

கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி நடிக்கும் புது படத்தின் அப்டேட்!
Published on

நகைச்சுவையில் இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள சூரி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'மாமன்' படத்தை தொடர்ந்து தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் 'மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் 'இன்று நேற்று நாளை', 'அயலான்' படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதனை தொடர்ந்து புதிய படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

படப்பிடிப்பு

இந்த நிலையில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, நடிகர் சூரி இந்த புதிய படத்துக்காக ரூ.25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com