"வாழிய நீடு..!"- கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Kamalhassan- vairamuthu
Published on

கவிஞர் வைரமுத்து இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1980ம் ஆண்டில் பாராதிஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியாரக அறிமுகமாகி, இது ஒரு பொன் மாலைப் பொழுது என்ற ஹிட் பாடல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.

இதுவரை சுமார் 8000 பாடல்களை அவர் எழுதி இருக்கிறார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, கவிதைகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதிச் சாதனை படைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

பிறந்தநாள் வாழ்த்து

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பாட்டுக்குள் கவித்துவத்தைப் பொதிந்துவைத்த கவிதைத் தோழர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழிய நீடு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானபீட விருது

கவிஞர் வைரமுத்துவுக்கு 'ஞானபீட விருது' டெல்லியில் இன்று (ஜூலை 13) வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார். தனது பிறந்தநாளான இன்று, இந்தியாவில் இலக்கியத்திற்கென வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெறும் சிறப்பைப் பெறுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com