தெலுங்கு படம் வேண்டவே வேண்டாம்.. கேஜிஎப் இயக்குநர் படத்திற்கு 'நோ' சொன்ன டொவினோ

ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரராக டோவினோ நடிப்பதாக தகவல்கள் பரவின.
தெலுங்கு படம் வேண்டவே வேண்டாம்.. கேஜிஎப் இயக்குநர் படத்திற்கு 'நோ' சொன்ன டொவினோ
Published on

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வருபவர் டொவினோ தாமஸ்.

கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'டிராகன்' டோவினோவை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரராக டோவினோ நடிப்பதாக தகவல்கள் பரவின.

ஆனால் அந்த வாய்ப்பை டொவினோ நிராகரித்துள்ளது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறது.

முன்னதாக பிரபாஸை வைத்து பிரசாந்த் நீல் இயக்கிய சலார் படத்தின் மற்றொரு மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் நடித்திருந்தார்.

அந்த வரிசையில் டோவினோ தெலுங்கில் நடிக்கக்கூடம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பை மறுத்ததற்கு டொவினோ சுவாரஸ்யமான காரணம் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது, “ஒரு தெலுங்கு படத்துக்கு தேதிகளை ஒதுக்கினால், நான்கு மலையாள படங்களை நான் இழக்க நேரிடும்” என்று அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

மலையாள மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்பு மாறுபட்டது, மலையாள திரைப்படங்கள் குறைந்த நாட்களில் படமாக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com